Wednesday, August 12, 2015

அவலூர்பேட்டையில் இலவச கறவை மாடு பயனாளிகளுக்கு பயிற்சி முகாம்


அவலூர்பேட்டையில் இலவச கறவை மாடு பயனாளிகளுக்கு பயிற்சி முகாம்

அவலூர்பேட்டை:அவலூர்பேட்டையில் இலவச கறவை மாடு பயனாளிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம் பரையம்பட்டு, கடப்பனந்தல் கிராமங்களில் இலவச கறவை மாடு வழங்குவதற்கு 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அவலூர்பேட்டை கால்நடை மருந்தகத்தில் பயிற்சி முகாம் நடந்தது.

திண்டிவனம் கோட்ட கால்நடை துறை பராமரிப்பு உதவி இயக்குனர் டாக்டர் மகேந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். விழுப்புரம் கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் வெங் கடபதி கலந்து கொண்டு, கறவை மாடு கொள்முதல் செய்தல், பராமரித்தல், நோய்களிலிருந்து காத்தல், சிகிச்சை அளித்தல் குறித்து விளக்கினார்.
இதில் டாக்டர்கள் ராஜேந்திரன், மோகன், ராஜன், ஊராட்சி தலைவர்கள் அமாவாசை, அங்கம்மாள் ராமச்சந்திரன், அ.தி. மு.க., கிளை செயலாளர் பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment