Thursday, August 27, 2015

விவசாயிகள் குறைதீர் கூட்டம்


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், நான்குவழிச் சாலைப் பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகளின் குறைதீர் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வட்டாட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ தலைமை வகித்தார். இதில், நான்குவழிச் சாலை திட்டத்தின் சிறப்பு வருவாய் அலுவலர் காங்கேயன் கென்னடி, திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துடையார், வட்டாட்சியர்கள் மகேஸ்வரன், பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், திருப்புவனம், லாடனேந்தல், கழுகர்கடை, பாப்பாங்குளம், தூதை, திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நான்குவழிச் சாலைப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு கோரி ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்றும், சில விவசாயிகளின் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை அறிவிக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 
இப்புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ உத்தரவிட்டார்.
 Source: 

http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2015/08/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/article2995380.ece

No comments:

Post a Comment