அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை பகுதியில் தற்போது கோடை உழவு செய்யப்பட்டு விவசாயிகள் சாகுபடிக்கு தயாராக உள்ளனர். இந்நிலையில் சில கிராமங்களில் ராசயன உரங்களை குறைந்தவிலைக்கு விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதாக கூறி போலியான உரங்களை விற்பதாக புகார் வருகிறது. எனவே, விவசாயிகள் போலியான உரங்களை வாங்கவேண்டாம் என்றும் போலி உரங்களை விற்பனை செய்வோர் நேரடியாக தங்களை அணுகினால் வேளாண் உதவி இயக்குநர், அருப்புக்கோட்டை 9443854725 என்ற எண்ணிலும் உர ஆய்வாளர் 9094040455 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவேண்டும். மேலும் அருப்புக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் பாசிப்பயறு மற்றும் உளுந்து விதைகள் ரூ.25 மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும் என வேளாண் உதவி இயக்குநர் மணிசேகரன் தெரிவித்துள்ளார்.
Source:
No comments:
Post a Comment