Wednesday, August 12, 2015

சூரிய காந்தி பூக்களில்அழுகல் நோய்


சூரிய காந்தி பூக்களில்அழுகல் நோய்
வாலாஜாபாத்: சூரிய காந்தி பூக்களை, மண்டை அழுகல் நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியத்தில், கீழ்ஒட்டிவாக்கம்; வெங்குடி; தாங்கி; வில்லிவலம் ஆகிய கிராமங்களில், எண்ணெய் வித்து பயிரான, சூரிய காந்தியை விவசாயிகள் பயிரிட்டுஉள்ளனர். தற்போது, சூரிய காந்தி, அறுவடைக்கு தயாராக பூத்து குலுங்கி உள்ளது. இந்நிலையில், தாங்கி அருகே, இப்பூக்களை மண்டை அழுகல் நோய் தாக்கி உள்ளது. இதனால், பூக்கள் அழுகி வருகின்றன. சூரிய காந்தி பயிரிட்டுள்ள தாங்கி கிராம விவசாயிகள் நஷ்டமடைந்து உள்ளனர். இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பூக்கும் நேரத்தில் மழை பெய்தால், மண்டை அழுகல் நோய் ஏற்படும். இதை தவிர்க்க, பூ பூக்கும் நேரத்தில், டிஎம்.45 ரகம் 40 கிராம் மற்றும் பெவிக்சின், 20 கிராம் தேவையான அளவு தண்ணீரில் கலந்து, தெளிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment