Sunday, August 30, 2015

கரும்பில் கூடுதல் மகசூல் பெற வேளாண் அலுவலர் அறிவுரை


குளித்தலை: குளித்தலை பகுதி கரும்பு விவசாயிகளுக்கு, குளித்தலையை அடுத்த தண்ணீர்பள்ளி உதவி வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், வேளாண்மைதுறை உதவி வேளாண்மை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.

கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் நச்சலூர் பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்கின்ற விவசாயிகள் கரும்பு அறுவடைக்குப்பின், கரும்பு தோகையை தூளாக்கும் இயந்திரத்தின் மூலம் தோகையை தூளாக்கினால், மீண்டும் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். இது குறித்து, குளித்தலை தாலுகா, நச்சலூர் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி ராஜலெட்சுமி கூறியதாவது: சிறப்பு பட்டத்தில் பயிரிடப்பட்ட, 0.95 சென்ட் நிலத்தில் கரும்பு அறுவடைக்குப்பின், சென்ற ஆண்டு அதன் தோகையை தூளாக்கி மீண்டும் உரமாக்கி கரும்பு பயிரிட்டபின், கடந்த ஆண்டு கிடைத்த, 30 டன் மகசூலைவிட, கூடுதலான மகசூல் கிடைத்தது. எனவே, விவசாயிகள் அனைவரும் கரும்பு பயிரிட்டு, அறுவடைக்குப்பின் அதன் தோகைகளை தூளாக்கி உரமாக்கினால், ஓர் ஏக்கருக்கு, 52 டன் வரை மகசூல் கிடைக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இதே போல், வேளாண்மைத்துறை அலுவலர்களும் கரும்பு அறுவடைக்குப்பின், தோகைகளை தூளாக்கி நிலத்தில் உரமாக பயன்படுத்தும் போது அதிக மகசூல் கிடைக்கும், என்று தெரிவித்தனர்.



Source:

No comments:

Post a Comment