Friday, August 21, 2015

மூன்று லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,520 கோடி பயிர் கடன்



கூட்டுறவு வங்கிகளில், மூன்று லட்சம் விவசாயிகளுக்கு, 1,520 கோடி ரூபாய், பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், உணவு உற்பத்தியை அதிகரிக்க, நகர, தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 5,500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், தற்போது வரை, மூன்று லட்சம் விவசாயிகளுக்கு, 1,520 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: கூட்டுறவு வங்கியில், ஒரு கிளையில் இருந்து, மற்ற கிளைக்கு பணம் செலுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதன் மூலம், விவசாயிகள் உட்பட, பலரும் பயன் அடைவர்.கூட்டுறவு வங்கியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

 Source:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1324013

No comments:

Post a Comment