Sunday, August 30, 2015

நெல் விதை நேர்த்தி செய்ய வேளாண் அதிகாரி தகவல்


விதை நேர்த்தி செய்து பயன்பெற நெல் விவசாயிகளுக்கு, டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இப்பருவத்தில் கோ.,50, கோ.,51, .டி.டி., 39 மற்றும் .எஸ்.டி.,16 ரகங்கள் சாகுபடி செய்யலாம்.
நெல்லில் விதை மூலம் பரவும் குலை நோய், தூர் அழுகல் நோய் மற்றும் கரிப்பூட்டை நோய் போன்ற நோய்கள் வளர்ச்சி பருவத்தில் பயிரைத் தாக்கி மகசூலை பாதிக்கிறது. எனவே ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில், 12 மணி நேரம் விதைகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதற்கு முன்பாக ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டசிம் அல்லது ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் சூடோமோனாஸ் என்ற அளவில் நீரில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம் என்றார்.

Source:

http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/08/31/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3/article3002651.ece

No comments:

Post a Comment