விளாத்திகுளம் வட்டம் புதூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் வேளாண் இடுபொருள்கள் வழங்கும் விழா வேளாண் விரிவாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் முருகப்பன் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் மாரியம்மாள், உதவி வேளாண் அலுவலர்கள் மணி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புரட்டாசி பட்டத்தை முன்னிட்டு மானாவரி விவசாயிகளுக்கு கம்பு, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு விதைகள் மற்றும் உயிர் உரங்கள், நுண்னுட்ட உரங்கள், விதை நேர்த்தி மருந்துகள், கைத்தெளிப்பான்கள், விசை தெளிப்பான்கள், விதை சேமிப்பு கலங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அயன்வடமலாபுரம் ஊராட்சித் தலைவர் வரதராஜன், மானாவரி தானிய பயிர் குழு விவசாயிகள் முத்து, இருளாண்டி, சுப்புத்தாய், கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment