கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறை கேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற உள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் அன்று காலை 10 மணியளவில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற உள்ளது. இதில்,வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கோவை மாவட்ட விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது வேளாண்மை தொடர்பான புகார்களை நேரிலோ, மனுவாகவோ வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:
No comments:
Post a Comment