Sunday, August 23, 2015

பசுமை பண்ணை காய்கறி அங்காடி ஒரு ஆண்டில் ரூ.5 கோடி விற்பனை:தமிழகத்தில் முதலிடம்


துாத்துக்குடி:“துாத்துக்குடி பசுமை பண்ணை காய்கறி அங்காடி ஒரு ஆண்டில் ரூ.5 கோடிக்கு விற்பனை செய்து தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது,” என அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.துாத்துக்குடியில் பசுமை பண்ணை காய்கறி அங்காடி 2014 ஆக., 14 ல் துவக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் சண்முகநாதன் பேசியதாவது:ம்மாவட்டத்தில் விளையும் 13 வகையான காய்கறிகள், உட்பட அனைத்து காய்கறிகளும் கிடைக்கும் வகையில் செயல்படுகிறது. ஒரு ஆண்டில் 18,லட்சத்து 20 ஆயிரத்து 547 கிலோ காய்கறிகள், ரூ.5கோடியே 8, லட்சத்து 95 ஆயிரத்து 767 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த பசுமை பண்ணை காய்கறி அங்காடி என்ற பரிசைபெற்று, முதலிடம் பெற்றுள்ளது, என அவர் பேசினார்.ரவிக்குமார், கலெக்டர் பேசியதாவது: இங்கு சரியான எடையிலும், குறைந்தவிலையிலும் கிடைப்பதால் விற்பனை அதிகரித்துள்ளது என பேசினார்.

Source:

No comments:

Post a Comment