Thursday, August 27, 2015

கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி: இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்




இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் கிராமப்புற இளைஞர், இளம் பெண்களுக்கு கோழி வளர்ப்புத் தொழில்நுட்பம் குறித்த 6 நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் சு. ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இருபால் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இலவச மதிய உணவு மற்றும் தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அசைவ உணவு வகையில் அனைத்துத்தரப்பினரும் உணவில் அதிகம் பயன்படுத்தி வரும்  கோழிகளை வளர்க்கும் தொழில்நுட்பங்கள் குறித்து 6 நாள்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் சேர விரும்பும் 18 வயது முதல் 35 வயது வரையுள்ள கிராமப்புற இளைஞர்கள், மகளிர் 3 புகைப்படங்கள், மதிப்பெண் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் செல்லிடப்பேசி எண் ஆகியவைகளைக் குறிப்பிட்டு 4.9.2015 ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 15062, மேல நான்காம் வீதி, திலகர் திடல், புதுக்கோட்டை. 622001. தொடர்புக்கு: 04322-225 339, 99947 37185.

Source: 

http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2015/08/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/article2995686.ece

No comments:

Post a Comment