களர் மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்: கோ.43 மற்றும் பையூர் ரக நெல், கோ.11, கோ.12,
கோ.13 ஆகிய கேழ்வரகு இரகங்கள் அதிக அரை களர் தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை. கோ.24,
கோ.25 ரக சோளம் பழைய பருத்தி இரகங்கள் (எம்.சி.யு), கோ.5, கோ.6 ரக கம்பு, கோசி.671
ஆகிய கரும்பு ரகங்கள் மிதமான களர் நிலங்களில் நன்றாக வளர்பவை. தவிர சூரியகாந்தி சவுண்டல்
(சூபாபுல்), வேலி மசால், குதிரை மசால், வரகு, கொய்யா, இலந்தை, கருவேல், வேலிக்கருவேல்,
வேம்பு, சவுக்கு ஆகியவையும் களர் தன்மையைத் தாங்கி வளர்கின்றன. பீன்ஸ், நிலக்கடலை,
மக்காச்சோளம், மொச்சை, எலுமிச்சை ஆகியவற்றை களர் நிலங்களில் பயிரிடக் கூடாது.
வாழையைத் தாக்கும் காய்ப்பேன்: வாழைக்காய்களை இரண்டு வகையான காய்ப்பேன்கள் தாக்குகின்றன. 1. பூவைத் தாக்கும் பேன், 2. வாழைப்பழத்தோலில் காயம் ஏற்படுத்தும் பேன்.
மிகச்சிறிய காய்களை பூப்பேன் தாக்குகிறது. சிறு காயங்களிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால் காய்களின் பரப்பில் சிறிய சிவப்புநிற புள்ளிகள் நாளடைவில் வளர்ந்து கறுப்பு நிற புள்ளிகளாக மாறிவிடும்.
பூ பேன் தாக்கும் ரகங்கள் - பூவன், நேந்திரன், கற்பூரவல்லி இரகங்களிலும், ரஸ்ட் காய்ப்பேன் சபா, மொந்தன், கற்பூரவல்லி, ரஸ்தாளி ஆகிய இரகங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பூ வெளிவந்தவுடன் மாலை நேரத்தில் குளோர்பைரிபாஸ் 20 உஇ மருந்தினை லிட்டருக்கு 2.5மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனை கடைசி சீப்பு வெளிவந்த 2-15 தினங்களுக்குள் தெளித்தல் அவசியம்.
ரஸ்ட் காய்ப்பேன் - காய்களின் மேற்தோலினை சுரண்டி சாற்றை உறிஞ்சுவதால் மற்றும் முட்டை இடுவதாலும் விரிசல் ஏற்பட்டது போன்ற காய்கள் காணப்படும்.
ஒருங்கிணைந்த கட்டுப்பாடு - வறட்சி நிலையாக குறைத்து போதுமான அளவு நீர்பாய்ச்சுவதால் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம். அனைத்து சீப்புகளும் வெளிவந்த உடனே வாழை ஆண் பூவை வெட்டி விடுதல் அவசியம். அல்லது பவேரிய பேசியானா 3மிலி, 100மிலி நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மண்ணில் கார்போபியூரான் 20 கிராம் அளவில் மரத்திற்கு கீழ் இட்டு கட்டுப்படுத்தலாம். ஷபாலி புரோபைலீன் பை கொண்டு தாரினை முழுமையாக மூடிவிடலாம். குளோர்பைரிபாஸ் மருந்தினை 1 லிட்டர் நீருக்கு 2.5மிலி அளவில் பூ மற்றும் தாரில் தெளிக்கலாம். அல்லது இமிடா குளோபிரிடு 17.8 உஇ 500மிலி நீரில் கலந்து ஊசி மூலம் வாழை பூ வெளிவரும் தருணத்தில் இட்டு கட்டுப்படுத்தலாம். தகவல் : முனைவர் பா.பத்மநாபன் மற்றும் எம்.எம்.முஸ்தபா, தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி-102.
பருத்தியில் ஊடுபயிர் செய்ய இரட்டை வரிசை நடவு முறை : இறவைப்பருத்தியில் வரிசைக்கு வரிசை 2 1/2மீ, செடிக்கு செடி 1 அடி என்ற இடைவெளியில் ஏக்கருக்கு 18 ஆயிரம் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
மானாவரி பருத்தியில் - வரிசைக்கு வரிசை 1 1/2மீ, செடிக்கு செடி 3/4 அடி என்ற இடைவெளியில் ஏக்கருக்கு 40 ஆயிரம் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
பருத்தியில் மகசூல் குறைந்திடாமல் ஊடுபயிரில் உபரி வருமானம் பெற உருவாக்கப்பட்ட முறைக்கு இரட்டை வரிசைமுறை எனப்பெயர். அதாவது, இரண்டு வரிசைகளுக்கு இடைப்பட்ட தூரத்தை இரண்டரை அடிக்குப்பதிலாக 2 அடி : 3:2 அடி : 3 அடி என மாற்றி அமைக்க வேண்டும். 3 அடி இடைவெளியில் ஊடுபயிர் செய்திடலாம். இரண்டு அடி இடைவெளியில் நீர்பாய்ச்சிடலாம். மண்ணின் வளத்தைப் பொறுத்தும் இரகத்தினர் தன்மையைப் பொறுத்தும் செடிக்கு செடி விட வேண்டிய இடைவெளியை மாற்றி அமைக்கலாம். இதனால் ஏக்கருக்கு தேவையான 18,000 செடிகளை உருவாக்கலாம். 3 அடி இடைவெளிக்குள் ஊடுபயிர்களை பயிர் செய்து உபரி வருமானம் பெறலாம்.
இறவை பருத்திக்கு வெண்டை, முள்ளங்கி, உளுந்து, காராமணி மற்றும் வாய்க்கால்வரப்பில் சூரியகாந்தி, தினை, மக்காச்சோளம் பயிரிடலாம். மானாவாரி பருத்தியில் - கொத்தமல்லி, சூரியகாந்தி பயிரிடலாம்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source:
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26493&ncat=7
No comments:
Post a Comment