Monday, August 31, 2015

திருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்


திருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வைரஸ் கிருமி தாக்குதலில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கால் மற்றும் வாய்ப்பகுதியில் கால்நடைகளுக்கு புண்கள் காணப்படுதல், அதிக காய்ச்சல், வாயில் உமிழ்நீர் வடிதல், பால் குறைதல் மற்றும் சினை பிடிப்பதில் சிரமம் ஏற்படுவதில் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
கோமாரி நோய் பாதிப்பை முற்றிலும் தடுக்கும் வகையில் 2011-12-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 முறை தடுப்பூசி கால்நடைகளுக்குபோடப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 3.31 லட்சம் கால்நடைகள் பயன்பெறும்.
செப்டம்பர் 1 முதல் 21ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறும்.காலை 6 முதல் 9 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி வரையிலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் நாள்களிலும் கால்நடை மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படும்.
எனவே மாவட்டத்தில் கால்நடைகளை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்குத் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Source: 

http://www.dinamani.com/edition_trichy/trichy/2015/08/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/article3001867.ece

No comments:

Post a Comment