Sunday, August 23, 2015

ரூ.6919 கோடி கடன் இலக்கு கடன் திட்ட அறிக்கை தகவல்




ஈரோடு:மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டில் கல்வி, விவசாயம், சிறு தொழில் என பல்வேறு துறைகளுக்கு மொத்தம் ரூ.6919 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கடன் திட்ட அறிக்கை புத்தக வெளியீட்டு விழாவில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.3702 கோடி, சுய உதவி குழு உட்பட சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக ரூ.1909 கோடி, கல்வி கடன், வீட்டு கடன் உட்பட பிற இனங்களுக்கு ரூ.1308 கோடி, அனைத்து இனங்களுக்கும் சேர்த்து ரூ6919 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இது ரூ.910 கோடி கூடுதலாகும்.கடன் திட்ட அறிக்கை புத்தகத்தை கலெக்டர் வெளியிட்டார். முதல் பிரதியை நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சந்தானம் பெற்று கொண்டார்.இதில் முன்னோடி வங்கியான கனரா வங்கி மேலாளர் செல்வராஜ் பங்கேற்றார்.

Source:
 http://www.dinamalar.com/district_detail.asp?id=1325582

No comments:

Post a Comment