Thursday, August 27, 2015

வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்!



வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய உதவிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் 2015-16-இல் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து வேலூர் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் கூறியது:
 தேசிய வேளாண அபிவிருத்தித் திட்டம்: இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைந்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லுக்கு விதை விநியோக மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோ ரூ.10 வழங்கப்படுகிறது.
 இயந்திர நடவுமுறையை பிரபலப்படுத்துவதில் ஹெக்டேருக்கு ரூ. 3 ஆயிரமும், விதை உற்பத்தி மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.5-ம் வழங்கப்படுகிறது.
 சிறுதானிய விதை உற்பத்தி மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.10-ம், உயர் விளைச்சல் விதை விநியோக மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.15-ம், நுண்ணூட்டக் கலவை விநியோகத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.500-ம் வழங்கப்படுகிறது.
 பயறுவகையில், நடவுமுறை துவரை சாகுபடி ஊக்குவிப்பு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.2,500-ம், டீஏபி கரைசல் தெளித்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ.650-ம், வரப்பு பயிராக பயறு வகை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.100-ம், விதை உற்பத்தி மானியம் கிலோவுக்கு ரூ.15-ம் வழங்கப்படுகிறது.
 எண்ணெய்வித்து இயக்கத்தில் விதைப்பு இயந்திரம் மூலம் மணிலா விதைக்க ஹெக்டேருக்கு ரூ.1000, திரவ உயிர் உரம் விநியோகத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.150, மணிலா பயிர் வளர்ச்சி ஊக்கி பரவலாக்குதல் திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ.1,300-ம் மானியமாக வழங்கப்படுகிறது.
 கரும்புத் தோகை நில போர்வை மூலம் மண்வள ஊட்டமேற்றுதல், இரும்பு சல்பேட் இடுதல் திட்டத்தில் கரும்பு தோகை உரித்து நில போர்வை அமைத்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2,500-ம், இரும்பு சல்பேட் இடுதலுக்கு ஹெக்டேருக்கு ரூ.500-ம் வழங்கப்படுகிறது.
 தென்னங்கன்று விநியோகத்தில் நெட்டை கன்றுக்கு ரூ.15-ம், நெட்டை குட்டைக்கு கன்றுக்கு ரூ.25-ம், குட்டை நெட்டைக்கு கன்றுக்கு ரூ.50-ம் மானியம் உண்டு.
 தேசிய எண்ணெய்வித்து, எண்ணெய் பனை இயக்கம்: விதைக் கன்றுகள் விநியோகத்துக்கு ரூ.8 ஆயிரமும், முதல் வருட நடவு பராமரிப்புக்கு ரூ.4 ஆயிரமும், 2-ஆம் வருட நடவு பராமரிப்புக்கு ரூ.4 ஆயிரமும், 3-ஆம் வருட நடவு பராமரிப்புக்கு ரூ.4 ஆயிரமும், 4-ஆம் வருட நடவு பராமரிப்புக்கு ரூ.4 ஆயிரமும் (ஹெக்டேருக்கு) மானியம் வழங்கப்படுகிறது.
 முதல் வருட எண்ணெய்பனையில் ஊடு பயிரிட ரூ.3 ஆயிரம், 2-ஆம் வருட எண்ணெய் பனை சாகுபடியில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம், 3-ஆம் வருட எண்ணெய் பனை சாகுபடியில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம் (ஹெக்டேருக்கு) வீதம் மானியம் உண்டு.
 ஆதார விதை உற்பத்திக்கு 15 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.10-ம், சான்று விதை உற்பத்திக்கு கிலோவுக்கு ரூ.10-ம், சான்று விதை விநியோகத்துக்கு 50 சதவீதம் அல்லது கிலோவுக்கு ரூ.12 மானியம் வழங்கப்படுகிறது. பெருவிளக்கப் பண்ணை அமைத்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.
 விதை கிராமத் திட்டம்: சான்று விதை விநியோகத்துக்கு நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.10-ம், சிறுதானியத்துக்கு கிலோவுக்கு ரூ.15-ம், பயறுவகைக்கு கிலோவுக்கு ரூ.25-ம், எண்ணெய்வித்துக்கு கிலோவுக்கு ரூ.12-ம் மானியம் உண்டு.
 தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் (பயறு வகை): 15 ஆண்டுகளுக்குள் வெளியிட்ட ரகங்கள் மட்டும் சான்று விதை விநியோகத்துக்கு கிலோவுக்கு ரூ.25-ம், தொகுப்பு பயறுவகை தொழில்நுட்ப சாகுபடி செயல்விளக்கத்துக்கு ஹெக்டேருக்கு ரூ. 4 ஆயிரமும், ஊடுபயிர் பயறுவகை தொழில்நுட்ப சாகுபடி செயல்விளக்கத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500-ம் மானியம் அளிக்கப்படுகிறது.
Source: 
 

No comments:

Post a Comment