Wednesday, August 19, 2015

தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு


தமிழகம், புதுவையின் சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமையும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
 இந்த நிலையில், புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிராமப்பட்டினத்தில் 90 மி.மீ. மழையும் தக்களையில் 80 மி.மீ. மழையும் பெய்துள்ளது. முத்துப்பேட்டையில் 50 மி.மீ. மழையும் தம்மம்பட்டி, குழித்துறையில் 40 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
 இதேபோல, பட்டுக்கோட்டை, வால்பாறை, அஞ்செட்டி, பேராவூரணி (30 மி.மீ.), தஞ்சாவூர், திருவிடைமருதூர், பாபநாசம், பேச்சிப்பாறை, கும்பகோணம் (20 மி.மீ.), மதுரை, பரமக்குடி, ஒரத்தநாடு, ஏற்காடு, சின்னக்கல்லாறு (10 மி.மீ.) உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.

Source:

http://www.dinamani.com/tamilnadu/2015/08/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/article2983213.ece

No comments:

Post a Comment