Tuesday, August 18, 2015

விவசாயத்துறை மானியம்:வங்கி மூலம் வழங்க உத்தரவு




தேனி:மானியங்களை 'இ.சி.எஸ்'., முறையில் விவசாயிகளின் வங்கி கணக்கு மூலம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.விவசாயத்துறை மூலம் அரசு விவசாயிகளுக்கு இடுபொருட்கள், பூச்சி மருந்துகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதுவரை நிதி உதவிகள் விவசாயிகளுக்கு காசோலைகள் மூலம் வழங்கப்பட்டன. இதில் பல முறைகேடுகள் நடந்தன. எனவே இந்த முறைகேடுகளை களையும் வகையில், இனிமேல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியம் மிக குறைந்த அளவாக இருந்தாலும், அந்த மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்கு மூலம், இ.சி.எஸ்., முறையில் கருவூலம் மூலம் வழங்கவேண்டும்.
2015-16 ஆண்டிற்கான அரசு மானியங்களை வங்கி கணக்கு மூலமே வழங்க வேண்டும் என
விவசாயத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Source
 

No comments:

Post a Comment