Tuesday, August 18, 2015

தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு



வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை (ஆக. 19) ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 வெப்பச் சலனம் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக, சென்னை, புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.
 இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை, புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
 வெப்பத்தால், அதிக புழுக்கம் நிலவுகிறது. வெப்பச் சலனம் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
 மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியாக இருக்கும். அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கும் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
 குறிப்பாக, தமிழகத்தின் மலைப் பகுதிகளான கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் உத்தமபாளையம், நாமக்கல் மாவட்டம் மங்களாபுரம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தலா 50 மி.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 40 மி.மீ. மழை

Source: 


No comments:

Post a Comment