இலவச விவசாய மின் இணைப்பு பெற வேண்டி, பதிவு செய்யாத விவசாயிகளுக்கு மீண்டும் பதிவு செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் முகமது முபாரக் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கோவை மின் பகிர்மான வடக்கு வட்டம் சார்பில், மேட்டுப்பாளையம் கோட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு வேண்டி, சாதாரண வரிசை திட்டத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே தயார்நிலை பதிவு செய்ய 30 நாள்கள் அறிவிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் உரிய காலத்தில் தயார்நிலை பதிவு செய்யாதிருந்தால், அவர்கள் தயார்நிலை பதிவு செய்ய கால நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment