Thursday, August 27, 2015

துவரை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு மான்யம்


குஜிலியம்பாறை:நிலக்கடலை பயிரில் துவரையை ஊடுபயிராக சாகுபடி செய்தால், ஏக்கருக்கு ரூ.400 மான்யம் வழங்கப்பட உள்ளதாக, வேளாண் உதவி இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
குஜிலியம்பாறை வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்தில் மானாவாரி நிலக்கடலை விவசாயமானது, குறைந்தது இரண்டாயிரம் ஏக்கர் பரப் பளவில் பயிரிடப்படுகிறது. கூலி யாட்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம், கடலை விதைக்கும் கருவி மூலம் விதைப்பு நடைபெறுகிறது. இவ்வாறு பயிரிடப்படும் நிலக்கடலையில், ஊடு பயிராக துவரை சாகுபடி செய்யும் ஏக்கருக்கு ரூ.400 மான்யம் வழங்க உள்ளனர். துவரை சாகுபடி செய்தால், கடலையில் பூச்சி தாக்குதல் ஏற்படுவதை கட்டுப் படுத்தலாம். மேலும் கடலை அறுவடைக்கு பின்பு துவரை மூலம் கூடுதல் வருமானம் பெறலாம். ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, ஆதார் எண் கொடுத்து, பயன்பெறுமாறு உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1328049

No comments:

Post a Comment