Thursday, August 20, 2015

சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க மானியக்கடனுதவி:

 சூரிய கூடார உலர்த்திகள் அமைக்க மானியக்கடனுதவி பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் அழைப்புவிடுத்துள்ளார்.
 இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
  சூரிய சக்தியால் இயங்கும் சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த உலர்த்திகள் மூலம் வாழை, தேங்காய், தக்காளி, காய்கறிகள், நறுமணப்பொருட்கள், இதர பழவகைகள் போன்ற பொருட்களை குறைந்த செலவில் உலர்த்தி பயன்பெறலாம்.
 ஒவ்வொரு சூரிய கூடார உலர்த்தியும் 400 சதுர அடியில் அமைக்கப்பட வேண்டும். அதன் அலகு தொகை ரூ.3.68 லட்சம் (வரிகள் இல்லாமல்). இதில் அரசு மானியமாக 50 சதவீதமான ரூ.1.84 லட்சம் வழங்கப்படும்.
 சூரிய கூடாரம், பொருட்களை உலர்த்த தேவையான தட்டுக்கள், நகரும் வகையில் அமைக்கப்பட்ட மேடைகள் இந்த அலகு தொகையில் சேரம். மேலும் பொருட்களை உலர்த்தி தேவையான தட்டுக்கள் மற்றும் நகரும் வகையில் அமைக்கப்படும்.
 மேடைகள் இன்றி அமைக்கும் சூரிய கூடார உலர்த்திக்கு அலகு தொகை ரூ.2.42 லட்சங்கள். இதில் அரசு மானியமாக 50 சதவீதத்தொகை ரூ. 1.21 லட்சங்கள் வழங்கப்படும். சூரிய கூடார உலர்த்திகள் தனிநபரோ, அல்லது குழுக்களாகவோ அமைத்து மானிய உதவி பெறலாம்.
 ஈரோட்டில் உள்ள 14 வட்டாரங்களுக்கு தற்போது 3 எண்கள் சூரிய கூடார உலர்த்திக்கு ரூ.5.52 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் தேவையுள்ள விவசாயிகள் கீழ்கண்ட உபகோட்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்அடையலாம்.
 ஈரோடு வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், 73 ஜெயபாரதி மஞ்சள் கிடங்கு, மஞ்சள் வளாகம், நசியனூர் ரோடு, செம்பாம்பாளையம் ஈரோடு என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2555011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 கோபி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் தெற்கு பார்க் வீதி, கோபி என்ற முகவரியில் நேரிலோ, அல்லது 04285-229159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட நிலை அலுவலகமான செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, எச்-32 பெரியார் நகர் ஈரோடு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424-2262067 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Source:

http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/08/21/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/article2985851.ece

 

No comments:

Post a Comment