Thursday, August 27, 2015

எலும்பு வலுவிழத்தல்: 10 நிமிட சூரிய ஒளி அவசியம்



மூட்டு எலும்புகள் பலம் பெறுவதற்கு ஒரு நாளைக்கு பத்து நிமிட சூரிய ஒளி உடலில் படுவது அவசியம் என ராயப்பேட்டை மருத்துவமனையின் மூடநீக்கியல் நிபுணர் டாக்டர் நசீர் அகமது தெரிவித்தார்.
 எலும்பு மூட்டு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் நசீர் அகமது பேசியதாவது:
 எலும்பு வலுவிழத்தல் நோய், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்னைகள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் தாக்குகிறது.
 ஆண்களைவிட பெண்களையே இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. கால்சியம், வைட்டமின் டி3 குறைபாடுகளே இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம்.
 கால்சியம் சத்துக்களைப் பெறுவதற்கு கேழ்வரகை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 வைட்டமின் டி3 சத்துக்களைப் பெறுவதற்கு, காலை 10 மணி முதல் 4 மணி வரை ஒரு நாளைக்கு பத்து நிமிடம் சூரிய ஒளி உடலில் படுவது அவசியம் என்றார் அவர்.
 எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 350 பேருக்கு எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்யப்பட்டது.
 Source:  

No comments:

Post a Comment