பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில், அட்மா திட்டத்தின்கீழ் சமுதாய வானொலி நிலையம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
கோபியில் விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கோபி, வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி முன்னிலை
வகித்தார். ஈரோடு அட்மா திட்ட அலுவலர் ராஜகோபால் வரவேற்றார்.
இதில், பங்கேற்ற ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் மாரியப்பன்
பேசுகையில்,
"ஈரோடு மாவட்டத்தில் அட்மா திட்டம் சிறப்பாக
செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சி, விரிவாக்கம், விவசாயிகள் ஆகிய 3 முனைகளையும் இணைத்து,
நவீன தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த இத்திட்டம் உதவுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், இத்திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடி
மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி
நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் சமுதாய வானொலி நிலையம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது'
என்றார்.
இந்நிகழ்ச்சியில், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக
வணிக விரிவாக்கத் துறைப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மைராடா வேளாண் அறிவியல் நிலைய
தோட்டக்கலை தொழில்நுட்ப அலுவலர் பச்சியப்பன், உழவியல் வல்லுநர் சரவணன் ஆகியோர் விவசாயிகளின்
சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.
இதில், பவானிசாகர், தளாவாடி, சத்தி, அம்மாபேட்டை,
அந்தியூர், நம்பியூர், தூக்கநாயக்கன்பாளையம், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த
முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் நிகழ்ச்சியை
ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment