அரியலூரில், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 125 விவசாயிகளுக்கு ரூ. 53 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான பயிர்க்கடனை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அண்மையில் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சியில், பொய்யூர், உடையார்பாளையம், டி.ஏ.வெங்கனூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த விவசாய உறுப்பினர்கள் 125 பேருக்கு ரூ. 53.89 லட்சம் பயிர்கடனை வழங்கி, ஆட்சியர் பேசியது:
அரியலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு 2015-16ஆம் ஆண்டு பயிர்க்கடனாக ரூ. 99 கோடி இலக்கு தமிழகம் அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டு, ஜூலை 2015 வரை அரியலூர் மாவட்டத்திலுள்ள 64 தொடக்க வேளாண் கூட்டறவுக் கடன் சங்கங்கள் மூலமாக 5,461 பேர்களுக்கு ரூ. 33.80 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பயிர்க்கடனை தவணை தவறாமல் செலுத்துபவர்களுக்கு தமிழக அரசால் வட்டித்தொகை மானியமும், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைநெல் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் பொதுச்சேவை மையம் மூலம் சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் ஆகியவை கணினி மூலம் பதிவு செய்து எடுத்துத் தரப்படுகிறது. அவற்றை தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெற்று பயனடையலாம் என்றார் அவர்.மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Source:
No comments:
Post a Comment