Friday, August 21, 2015

சிறுமலையில் 650 மூலிகைகள் ஆய்வில் தகவல்



காந்திகிராமம்:திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மருத்துவ குணமுள்ள 650 மூலிகைகள் இருப்பது காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 ஆயிரமும், தமிழகத்தில் 2 ஆயிரம் மூலிகைகளும் உள்ளன. இதில் தயாரிக்கப்படும் மருந்துகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பயன்படுகின்றன. அலோபதி மருத்துவத்தில் 100 க்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகள் பயன்படுகின்றன. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 960 மூலிகைகள் ஏற்றுமதியாகின்றன.

ஆண்டிற்கு 100 டன் வரை ஏற்றுமதியாகிறது. இதன்மூலம் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கிறது. சிறுமலையில் 1,050 தாவரங்கள் உள்ளன. அங்குள்ள மூலிகைகள் குறித்து காந்திகிராம பல்கலை உயிரியியல் பேராசிரியர் ராமசுப்பு தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர் கூறியதாவது:

சிறுமலை சிறிய மலையாக இருந்தாலும் 650 க்கும் மேற்பட்ட மூலிகைகள் இருக்கின்றன. இதில் முக்கிய மருந்துகள் தயாரிக்க கூடிய வில்லோ டாப்பி, கோல்சியம், டிஜிட்டாலிஸ், நித்ய கல்யாணி, சின்கோனா, ஊமத்தம், கேம்போதீகா, ஆடாதோடா, ஆரோக்ய பச்சை,வெண் குந்திரிகத்தி, சர்ப்பகந்தி போன்ற மூலிகைகள் காணப்படுகின்றன. மூலிகை சேகரிப்பு மலைவாழ் மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது. காட்டுத்தீ, முறையற்ற சேகரிப்பு போன்ற காரணங்கள் சில மூலிகைகள் அழிந்து வருகின்றன. அவற்றை காக்க தேவையான முயற்சிகளை எடுத்துள்ளோம், என்றார்.

Source:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1324120

No comments:

Post a Comment