குமரி மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஆக. 19) தொடங்குகிறது.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் எம்.ஆர்.வாணி
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குமரி மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய
ஆய்வு வாகனம் மூலம் பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஆக. 19) தெங்கம்புதூர் பேரூராட்சி
அலுவலகத்தில் தொடங்குகிறது.
ஆக. 24 இல் வட்டவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும்,
25இல் திக்கணங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 26இல் பள்ளியாடி தொடக்க
வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் பயணம் மேற்கொள்ளப்பட்டு மண் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட
உள்ளது.
எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள்
மண்மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து உடனடியாக மண்மாதிரி முடிவுகளை
பெற்றுக்கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Source:
http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2015/08/19/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/article2981275.ece
No comments:
Post a Comment