Thursday, August 20, 2015

கரும்பு விவசாயிகளுக்கு வங்கி மூலம் ரூ. 3 லட்சம் கடன்: இயக்குநர் தகவல்


சிவகங்கை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வங்கி மூலம் விவசாய கடன் ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என சர்க்கரை துறை இயக்குநர் மகேசன்காசிராஜன் தெரிவித்துள்ளார்.
 சிவகங்கை மாவட்டத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்க்கரைத் துறை இயக்குநர் மகேசன் காசிராஜன் மற்றும் ஆட்சியர் . மலர்விழி ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இதில் கரும்பு சாகுபடி பரப்பு, உற்பத்தி, அரசு வழங்கும் மானியங்கள், சொட்டு நீர் பாசனம் மற்றும் வங்கிக் கடன் ஆகியவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
 இக் கூட்டத்தில் சர்க்கரைத் துறை இயக்குநர் பேசியதாவது:        
சிவகங்கை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு 300 ஹெக்டர் பரப்புக்கு கூடுதலாக சொட்டு நீர் பாசன வசதி, மானியத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் விவசாயக் கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.   சக்தி சர்க்கரை ஆலையிலிருந்து கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்

 இக் கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் குருமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (விவசாயம்) சுதர்சன், துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source:

No comments:

Post a Comment