தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டைகள் அமைத்து நீர்நிலைகள் மேம்பட ஒத்துழைக்க வேண்டும் என்று சிறு, குறு விவசாயிகளுக்கு கலெக்டர் ராஜாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிராம சபைக் கூட்டம்
சுதந்திர தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் ராஜாராமன்¢ சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகள் மற்றும் சாலை வசதி, குடிநீர் விநியோகம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து விவாதித்தார்.
பின்னர் 10 நபர்களுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கான மானிய நிதி உதவியினை வழங்கினார். முன்னதாக கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
திடக்கழிவு மேலாண்மை
குடிநீர் விநியோகம் குறித்தும், கிராமப்புறங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழித்திட நடவடிக்கை எடுப்பது குறித்தும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்தும், குப்பையை அகற்றி சுற்றுப்புற சுகாதாரத்திற்கு வழி வகுப்பது குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் 60 பெரிய ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே பிரித்து மறுசுழற்சி செய்யப்படுகிறது. பொது மக்கள் குப்பைகளை வாறுகால்களில் கொட்டுவதை தவிர்த்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே பிரித்து மறுசுழற்சி செய்ய ஒத்துழைக்க வேண்டும். திறந்த வெளிகளில் மலம் கழிப்பதை தவிர்க்க அரசு தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. சுகாதாரம் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்காக உள்ளது. சுகாதாரம் மேம்பட மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
பண்ணைக் குட்டைகள்
நீர் நிலைகளை மேம்படுத்த கிராமப்புறங்களில் உள்ள சிறு விவசாயிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டதின் கீழ் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் மதிப்பில் பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் இதனைப்பயன்படுத்தி நீர் நிலைகள் மேம்பட முன் வர வேண்டும். அருகில் உள்ள ஊரணிகள் மழைக்காலத்திற்கு முன் சரி செய்யப்பட்டு நீர் ஆதாரத்திற்கு பயன்படுத்தப்படும். தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கல்வி வளர்ச்சி அடைந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும். கிராமப்புற மாணவ, மாணவிகள் நல்ல முறையில் கல்வி கற்று சமுதாயத்தின் முன்னேற்றம் அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பீபீஜான், வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகர், இனாம்ரெட்டியாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரன்¢ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source:
No comments:
Post a Comment