Tuesday, August 25, 2015

கோவிலாங்குளத்தில் கரும்பு சாகுபடி பயிற்சி


திருச்சுழி அருகே கோவிலாங்குளத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி துவக்கி வைத்து சாகுபடி கோட்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
  சக்தி சர்க்கரை ஆலை கரும்பு நிர்வாக அலுவலர் வேணுகோபால் சாகுபடியின் முக்கியத்துவம் பற்றி கூறினார். விதை பருவ சீவல் எடுக்கும் முறை, கரணை நேர்த்தி, நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் இதர மேலாண்மை முறைகளை பூரணியம்மாள் விளக்கினார். பூச்சி, நோய் கட்டுப்பாடு முறைகளை பற்றி  மாரீஸ்வரி எடுத்துரைத்தார். நுண்ணூட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி ஊக்கிகளின் முக்கியத்துவம் குறித்து ராஜ்குமார் விளக்கமளித்தார். நீ நவீன கரும்பு சாகுபடிக்கேற்ற ரகங்கள் பற்றி ஆனந்தி விளக்கினார். இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 100 விவசாயிகள் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை பூர்ணியம்மாள், கவிதா ஆகியோர் செய்திருந்தார்.

Source:

No comments:

Post a Comment