Tuesday, August 18, 2015

பஞ்சகவ்யா தயாரிப்பது எப்படி




இன்று தமிழ்நாட்டு திட்ட கமிஷன் துணைத்தலைவர் சாந்தஷீலா நாயர் முதல் த.நா.விவசாய பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் ராமசாமி வரை மட்டுமல்ல, ஸ்பிக் போன்ற இரசாயன உரத் தயாரிப்பாளர்கள் கூட இயற்கை வழி விவசாயம் பற்றி பேசத் தொடங்கி விட்டனர். ஸ்பிக் நிறுவனம் 3 வகை இயற்கை உரங்களை விற்பனைக்கு அனுப்ப தொடங்கி விட்டது.
இந்நிலையில் ""பஞ்சகவ்யா'' பற்றி எங்கும் பரபரப்பாக பேசுகின்றனர். பஞ்சகவ்யா என்றால் என்ன? டாக்டர் நம்மாழ்வார் தினம் தினம் பேசினாரே இந்த பஞ்சகவ்யா பற்றி அறிவோம்.
இதை தயாரிக்க மாட்டு சாணம் 3 கிலோ, மாட்டு சிறுநீர் (கோமியம்) - 3லி, பால் - 2லி, தயிர் - 2லி, நாட்டு சர்க்கரை - 1 கிலோ, (கரும்புச்சாறு - 2லி பயன்படுத்தலாம்), வாழைப்பழம்-12, இளநீர்-2லி, ஈஸ்ட்-100கி, கடலை பிண்ணாக்கு- 1 கிலோ.
பிண்ணாக்கை ஊறவைத்து, அனைத்து பொருட்களையும் மண் பானை / வாளியில் கலந்து, துணியால் மூடி நிழலில் வைக்க வேண்டும். தினம் கலக்கி விட்டால் நுண்ணுயிர்கள் பெருகும். இதன் மூலம் 30லி பஞ்சகவ்யா கிடைக்கும். 10 லிட்டர் நீரில் 300மிலி கலந்து தெளிக்கலாம். பயிர்கள் சிறப்பாக வளரும். 6 மாதம் வரை இதை பயன்படுத்தலாம். 1 ஏக்கருக்கு 30லி பஞ்சகவ்யாவுடன் 200லி அமுதக் கரைசல் பாசன நீருடன் கலந்து விடலாம். இதை பயன்படுத்த மண் வளம் கூடும். பூக்கள் அதிகமாகும். 
அதிக லாபம் கிடைக்கும். 
www.vanagam.com, www.tnau.ac.in இணைய தளத்தை பாருங்கள்.
- எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர், 
93807 55629.

Source:

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26492&ncat=7


No comments:

Post a Comment