Wednesday, August 12, 2015

ஹெக்டருக்கு 10 டன் மகசூல்மக்காச் சோளம் சாகுபடிக்கு பயிற்சி


 ஹெக்டருக்கு 10 டன் மகசூல்மக்காச் சோளம் சாகுபடிக்கு பயிற்சி
 பெரம்பலூர்,:மக்காச் சோளத்தில் ஹெக்டருக்கு, 10 டன் மகசூல் எடுக்கும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 110 விவசாயிகளுக்கான பயிற்சி, பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது, பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:பெரம்பலூர் மாவட்டம், மக்காச்சோளம் உற்பத்தியில், மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள், தற்போதைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, ஒரு ஹெக்டருக்கு, 10 டன் மகசூல் எடுக்கலாம். அதற்கான வழிமுறைகளை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் உங்களுக்கு வழங்குவர். நிலத்தின் மண் மாதிரி ஆய்வு செய்து, நிலத்தின் தன்மை, மண்ணுக்கு தேவைப்படும் சத்துக்கள் குறித்தும் அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப உரங்களை இட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் ஆறுமுகம், விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பற்றியும், வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, மண் மாதிரி எடுத்தல், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றியும், பெரம்பலூர் வட்டார வேளாண்மை அலுவலர்கள் ரமேஷ், மாயவேல் ஆகியோர் தொழில் நுட்பங்கள்பற்றி விரிவாக எடுத்துக் கூறினர்.

No comments:

Post a Comment