Thursday, August 20, 2015

"கால்நடைத் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதா'

 கால்நடைத் துறைக்கு முதன் முதலாக ரூ. 5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கூறினார்.
அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதியில் மேய்ச்சகால் புறம்போக்கு நிலங்களில் கால்நடை பசுந்தீவன உற்பத்தி திட்ட நிலத்தைப் பார்வையிட வியாழக்கிழமை வந்த அவர் அங்கு நடைபெற்ற தீவன விற்பனை தொடக்க விழாவில் பேசியதாவது: இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் கால்நடைத் துறைக்கு பட்ஜெட்டில் ஓராண்டுக்கு ரூ. 200 கோடி என ஐந்து ஆண்டுகளுக்கு ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்வர். ஆனால் ஐந்து வருடத்தில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு மட்டுமே ரூ. 5 ஆயிரம் கோடியை ஒதுக்கிய முதல் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.
மேய்ச்சக்கால் புறம்போக்கு நிலங்களில் கால்நடை பசுந்தீவன உற்பத்தி செய்யும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் முதலில் வேலூர், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களில் உற்பத்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி இங்கு 36 ஏக்கர் நிலப்பரப்பில் கோ.4, கம்பு நேப்பியர், வேலிமசால், தீவன மக்காச்சோளம் என 29 வகையான பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை மக்களுக்கு கிலோ ரூ1.50 எனும் விலையில் விற்கப்பட உள்ளது என்றார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமக்களுக்கு பசுந்தீவன விற்பனையை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சு.திலகர், பதிவாளர் டி.ஜே.அரிகிருஷ்ணன், பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் ஜே.தியாகராஜன், வேலூர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மனோகர்சிங், வேலூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மைய தலைவர் .சரஸ்வதி, கால்நடைத் துறை வேலூர் மண்டல இணை இயக்குநர் ராஜசேகரன், அரக்கோணம் எம்.எல்.. சு.ரவி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் என்.ஜி.பார்த்தீபன், அதிமுக மாவட்டப் பொருளாளர் கோ.சி.மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏபிஎஸ்.லோகநாதன், நெமிலி ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் வசந்த்ஜெயின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Source

No comments:

Post a Comment