காலாப்பட்டு பண்ணை தகவல் மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையத்தின் சார்பில் "நெல் சம்பா முன்பருவ கால பயிற்சி முகாம்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கொம்பாக்கம், முருங்கபாக்கம் மற்றும் அரியாங்குப்பம் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு நெல் உற்பத்தியை பெருக்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கப்பட்டது.
வேளாண் அலுவலர் டி.அனுப்குமார் வரவேற்றார். ஆத்மா திட்ட இயக்குநர் ரவிபிரகாசம் தலைமை வகித்தார்.
ஆத்மா துணை திட்ட இயக்குநர் எஸ்.சந்தானக்கிருஷ்ணன் அரசின் வேளாண் திட்டங்களை பற்றி விளக்கினார்.
காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை முனைவர் விஜயகுமார், நெல்லில் உள்ள பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று செயல்விளக்கம் அளித்தார்.
வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை முனைவர் ரவி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் நுண்ணுட்டச் சத்து குறைபாடுகளை பற்றி விளக்கினார்.
வேளாண் அலுவலர் வளர்மதி வாசுதேவன் ஒருங்கிணைந்த நோய்க் கட்டுப்பாடு பற்றி எடுத்துரைத்தார். கொம்பாக்கம், முருங்கபாக்கம் மற்றும் அரியாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆ.ஆதித்தன் நன்றி கூறினார்.
கிராம விரிவாக்க பணியாளர் சுந்தரமூர்த்தி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Source:
No comments:
Post a Comment