திண்டுக்கல், : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இந்த ஆண்டு காரிப் பருவத்தில் 20 பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,‘காப்பீட்டு திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகள் கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, உருளை, வெங்காயம், அன்னாசி, மஞ்சள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு செப்.15க்குள் அல்லது பயிருக்கான விதைப்பு மற்றும் நடவு ஒரு மாத காலத்திற்குள் இருப்பின் எது முந்தையதோ அதன்படி காப்பீடு செய்து கொள்ளலாம்.
நெல்(சம்பா, தாளடி, பிசானம்), கரும்பு பயிர்களுக்கு டிச.15க்குள் அல்லது பயிருக்கான விதைப்பு மற்றும் நடவு ஒரு மாத காலத்திற்குள் இருப்பின் எது முந்தையதோ அதன்படி காப்பீடு செய்து கொள்ளலாம்.கூடுதல் மதிப்பீட்டிற்கான பிரீமிய தொகையை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் விருப்பத்தின் பேரில் செலுத்தலாம். பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் கடன் பெற்ற வங்கி மூலமே இத்திட்டத்தில் சேர வேண்டும்.
இயற்கை சீற்றங்களான வறட்சி, வெள்ளம் ஏற்படுமாயின் மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பிரிமியம் பெறுவது நிறுத்தப்படலாம்.விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முன்மொழிவு படிவங்களை அருகில் உள்ள வேளாண் அலுவலகம் அல்லது கூட்டுறவு, வர்த்தக வங்கிகளில் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Source : Dhinakaran

No comments:
Post a Comment