மதுரை,
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தொலை நோக்குத் திட்டம் காரணமாக, விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மத்திய பட்ஜெட்உணவு பதனீட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இனி ஈடுபட விரும்புபவர்களுக்கும் மத்திய பட்ஜெட்டில் நல்ல செய்திகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் வேளாண் உணவுப் பொருட்களையும் தயாரிக்கப்படும் உணவு பதனீட்டு பொருட்களையும் சந்தைப்படுத்துவதற்கு அந்திய நேரடி முதலீட்டை 100 சதவீதம் அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது இந்தியாவில் உள்ள உணவு பதனீட்டு தொழில் துறையை வளர்ச்சி அடைய செய்வதோடு, வேளாண் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
தொலை நோக்கு பார்வையோடு இந்தியாவில் உற்பத்தியாகும் மற்றும் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை மட்டும் சந்தைப்படுத்துவதற்கு அந்திய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பதற்காக, வரவேற்பையும் பாராட்டையும் மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடியின் “மேக் இன் இந்தியா“ திட்டம் உணவு பதனீட்டு துறையில் வலுப்பெறும்.
கலால் வரி குறைப்புநம்நாட்டு உணவு பொருட்களை மட்டும் சந்தைப்படுத்துவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதால் சிறு மற்றும் நடுத்தர உணவு பதனீட்டு தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான உணவு பொருட்களை தயாரிக்க முடியும். நல்ல விலையும் கிடைக்கும். விவசாயிகளுக்கும் லாபகரமான விலை கிடைத்து இளைஞர்கள் வேளாண் துறையில் ஈடுபட முன்வருவார்கள். நம் நாட்டில் உள்ள உணவுப் பொருள் வினியோக நிறுவனங்களுக்கு தேவையான நிதி கிடைக்கும். நுகர்வோருக்கு தரமான மதிப்பு கூட்ட பெற்ற உணவுப் பொருட்கள் கிடைக்கும்.
மேலும் உணவு பொருட்களின் சேதாரத்தை தவிர்க்க குளிரூட்டப்பெற்ற போக்குவரத்து தொடர் சங்கிலி ஏற்படுத்தும் வகையில் குளிரூட்டப்பெற்ற கண்டெய்னர்களுக்கான சுங்கத் தீர்வையை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளதையும், 12.5 சதவீதமாக இருந்த கலால் வரியை 6 சதவீதமாக குறைத்துள்ளதையும் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source : Dailythanthi

No comments:
Post a Comment