நாமக்கல்லில் வரும் 29ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 29ம் தேதி, காலை 9 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் நாட்டுக்கோழி ரகங்கள், வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள், குஞ்சு பொரிக்கும் விதம், குஞ்சு பொரிப்பான்களின் பயன்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 28ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை திட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலா தெரிவித்துள்ளார்.
source : Dinakaran
source : Dinakaran
No comments:
Post a Comment