தென்னை ஒரு நீண்டகால பயிர். இதன் நீர்த்தேவை அதிகம். தட்ப வெப்பநிலையை பொறுத்து இடத்திற்கு இடம் நீர்த்தேவை மாறுபடும். கோடை காலத்தில் அதிக வெப்பநிலையாலும், காற்றின் குறைந்த ஈரப்பதத்தாலும் மண்ணிலிருந்தும் பயிர்களிலிருந்தும் அதிகளவு நீர் ஆவியாகி வறட்சி ஏற்படும். சொட்டுநீர் பாசனமுறையில் நீர் பாய்ச்சினால் தென்னைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 80 லிட்டர் நீர் தேவைப்படும். பாத்தி கட்டி நீர் பாய்ச்சினால் மரம் ஒன்றிற்கு
வாரத்திற்கு 600- 800 லிட்டர் நீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையுள்ள
இடங்களில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.
வறட்சியின் அறிகுறிகள்: மரத்தில் முற்றிய அடிஓலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாகி உதிர்ந்துவிடும். நடு மற்றும் நுனி இலைகள் வாடி வதங்கி கீழ்நோக்கி தொங்கும். புதிய குருத்தோலைகள், புதிய பாளைகள் தோன்றுவது தாமதமாகும். பாளைகளில் பெண் பூக்களில் மகரந்தசேர்க்கை ஏற்படாமல் கருகி உதிர்ந்துவிடும். குரும்பைகள் அதிகமாக உதிரும்.
வறட்சியால் பாதிக்கப்படும் மரங்களின் நுனி சிறுத்து மரமே காய்ந்து விடும்.
மேலாண்மை: ஆண்டுதோறும் மரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழுஉரம் இடவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட இரண்டு கிலோ பொட்டாஷ் உரத்தில் பாதியை ஆடி மாதத்திலும் மீதியை தையிலும் மற்ற உரங்களோடு சேர்ந்து இடவேண்டும். இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் குளோரின் வறட்சியை தாங்க உதவுகின்றன.
மரம் ஒன்றுக்கு 100 கிலோ கரம்பை அல்லது வண்டல் மண் இடலாம். நீர் பற்றாக்குறை அதிகமாகும் போது 3 அல்லது 5 அடி மட்டைகளை அகற்றிவிடலாம். கோடையில்
தென்னந்தோப்பில் உழவு செய்வதை தவிர்க்கலாம்.
பருவமழைக்கு முன்பாக மரத்தை சுற்றி ஆறடி அளவிற்கு 100 கிராம் சணப்பு விதைகளை விதைத்து பூப்பதற்கு முன்பாக மடக்கி கொத்திவிட வேண்டும்.
காய்ந்த 15 - 20 தென்னை மட்டைகளை மரத்தை சுற்றி வைத்து மண்போர்வை அமைக்கலாம். தென்னை மரத்தை சுற்றி ஆறடி விட்டத்திற்குள் வட்டபாத்தி அமைத்து அதில் 100 உரிமட்டைகளை புதைக்கலாம். இவை ஒவ்வொன்றும் அதன் எடையை போல ஆறு மடங்கு நீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டவை.
கோடையில் மரத்தை சுற்றி 2 - 3 மீட்டர் உயரத்திற்கு சுண்ணாம்பு பூசலாம். இம்முறைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டால் கோடை வெப்பத்தில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்கலாம்.
-பேராசிரியர் கொ.பாலகிருஷ்ணன், பயிர்வினையியல் துறை,
விவசாய கல்லூரி, மதுரை
source : Dinamalar

No comments:
Post a Comment