Tuesday, March 15, 2016

50,000 டன் பருப்பு கொள்முதல் செய்கிறது இந்திய உணவுக் கழகம்

போதுமான கையிருப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில், விவசாயிகளிடமிருந்து 50,000 டன் பருப்பு கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரூ.240 கோடி செலவிடப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 இதுகுறித்து மேலும் கூறப்பட்டதாவது:
 உள்நாட்டு சந்தையில் பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் ரபி பருவத்தில் 1 லட்சம் டன் பருப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
 இதில், 50,000 டன் பருப்பு கொள்முதலை இந்திய உணவுக் கழகம் மேற்கொள்ள உள்ளது. எஞ்சியுள்ள 50,000 டன் பருப்பை "நாபெட்' மற்றும் எஸ்எப்ஏசி அமைப்புகள் கொள்முதல் செய்யும். 
 இந்திய உணவு கழகத்தின் கொள்முதல் நடவடிக்கை விவசாயிகளிடம் இந்த வாரத்தில் தொடங்க உள்ளது. 40,000 டன் பருப்பு வகைகளையும், 10,000 டன் மைசூர் பருப்பையும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : Dinamani

No comments:

Post a Comment