தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் களப் பயணமாக விசாலயன் கோட்டையில் உள்ள சேது பாஸ்கரா விவசாய கல்லூரிக்கு சனிக்கிழமை சென்றனர்.
இப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இதில் பங்கேற்றனர். கல்லூரி வணிகப் பிரிவு மேலாளர் தமிழரசன் வரவேற்றார். கல்லூரி கல்வித் தலைவர் ஐராணி சேது தலைமை வகித்தார். கல்லூரி டீன் பேபி ராணி, பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பண்ணை மேலாளர் சதீஷ்குமார், பேராசியர் மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment