புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் சு. ரமேஷ் வெளியிட்ட தகவல்:
எங்களது பயிற்சி நிலையத்தின் சார்பில் படித்து,வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்கள், மகளிர்க்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் நோக்கில் அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறோம். அதன்படி, தற்போது காளான் வளர்க்கும் தொழில்நுட்பங்கள் குறித்து 6 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில்,சேர விரும்பும் 18 வயது முதல் 35 வயது வரையுள்ள பட்டப்படிப்பு முடித்த கிராமப்புற இளைஞர்கள்,மகளிர் நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,15062,மேல 4-ம் வீதி, திலகர் திடல், புதுகை 622 001 என்ற முகவரியில் 4.4.2016ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04322-225 339, 99947 37185.
Source : Dinamani
No comments:
Post a Comment