Thursday, March 17, 2016

வைகை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை


மதுரை மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசனத்தின் இருபோக, ஒருபோக பாசனப் பகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக ஒருமுறை பாசனநீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: பெரியாறு இருபோக, ஒருபோக பாசன பகுதிகளில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நெற் பயிர்களைக் காப்பாற்ற இன்னும் ஒருமுறை இறுதிக் கட்ட தண்ணீர் திறந்து விட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் விளைந்த நெற் பயிர்களைக் காக்க முடியாது. கிணறு, கண்மாய் நீர் ஆதாரங்கள் இல்லாத நேரடி பாசன நிலங்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.  ஆகவே, இன்னும் ஒருமுறை பெரியாறு பாசனப் பகுதிக்குத் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலூர்: பெரியாறு- வைகை பாசன ஒரு போகம் மற்றும் இருபோக சாகுபடி பகுதிகளில் நெற்பயிரைக் காப்பாற்ற ஒருமுறை, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என மேலூர் ஒரு போக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் மீ.முருகன், இருபோக சாகுபடிப் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் மண்ணாடிமங்கலம் முருகன் மற்றும் ரவி, திருப்பதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment