மும்பை,
2019–ம் ஆண்டிற்குள் மராட்டியம் வறட்சியற்ற மாநிலமாக மாற்றப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மழைப்பொழிவு குறைவு
மராட்டிய சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று கடந்த நிதி ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கடந்த ஆண்டில் தேசிய மழைப்பொழிவை காட்டிலும், மராட்டியத்தில் 59.4 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. இதில், மொத்தம் உள்ள 355 தாலுகாக்களில் மும்பை உள்ளிட்ட 278 தாலுகாக்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.
வறட்சியற்ற மாநிலம்
2015–ம் ஆண்டு 141.46 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிர் உற்பத்தி நடந்தது. இது 2014–ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு. ஜல்யுக்த் சிவர் அபியான் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. 2019–ம் ஆண்டிற்குள் மராட்டியத்தை வறட்சியற்ற மாநிலமாக்க வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம். இதற்காக கால்வாய்கள், குளங்கள் வெட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆண்டு தோறும் குடிநீர் பஞ்சத்தில் இருந்து 5 ஆயிரம் கிராமங்களை மீட்பது அரசின் இலக்காகும்.
இவ்வாறு பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source : Dailythanthi
No comments:
Post a Comment