தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 2016-ஆம் ஆண்டுக்கான ரிகோ சிறப்புக் கல்வி விருது வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தேர்வாணையக் கட்டுப்பாட்டாளர் கி.இளமுருகு விருதைப் பெற்றுக்கொண்டார்.
மேலும், இப்பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் அற்ற தேர்வு முறை 2013-ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இது, முதன்முதலாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில், திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களே சரிபார்க்கலாம். எனவே, இந்தத் தேர்வு முறை மாணவர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ரிகோ 2016 சிறப்புக் கல்வி விருது (நிறுவனப் பிரிவில்) பெற்றிருப்பது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல்கல் என பல்கலைக்கழக தேர்வாணையக் கட்டுப்பாட்டாளர் கி.இளமுருகு தெரிவித்தார்.
Source : Dinamani
No comments:
Post a Comment