நாகை மாவட்டத்தில் கடந்தாண்டு வேளாண் விற்பனை கூடங்கள் மூலம் ரூ.32 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாகை விற்பனை குழுவின் கீழ் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், வேதாரண்யம், கீழ்வேளூர், சீர்காழி, நாகை, திருப்பூண்டி ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனை கூடங்களின் மூலம் கடந்த ஆண்டு ரூ.32 கோடி மதிப்புள்ள 6,800 டன் பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெற்றுள்ளனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதால், சரியான எடை, போட்டி விலை, விரைவான பட்டுவாடா, கமிஷன், இடைத்தரகு இல்லாமல் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். மாவட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு, கடலை அறுவடை தற்போது தொடங்கி நடந்து வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து பயன்பெறலாம் என நாகை விற்பனை குழு செயலாளர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.
source : dinakaran

No comments:
Post a Comment