Friday, March 25, 2016

ஈட்டி, சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகள்: கொளத்தூர் பகுதியில் நடவு செய்ய திட்டம்


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கொளத்தூர் ஒன்றியத்திலுள்ள அரசு நிலங்களில், ஈட்டி, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட உயர்தர மரக்கன்றுகள் வளர்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், ஒரு ஒன்றியத்துக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் தேர்வு செய்யப்பட்ட ஒரு பஞ்சாயத்தில் பசுமை குடில் அமைத்து, மரக்கன்றுகள் வளர்க்கப்படும். வளர்ந்த கன்றுகள் ஒன்றியத்திலுள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் அரசு நிலங்களில் வளர்க்கப்படும். கொளத்தூர் ஒன்றியத்தில், மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு நவப்பட்டி பஞ்., தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவப்பட்டி பஞ்., காவிரி கரையோரம், 13 ஆயிரம் சதுரடியில் பிரம்மாண்ட பசுமை குடில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தனம் ஈட்டி, கருங்காலி உள்ளிட்ட மரங்கள் அழிந்து விட்டது. வனப்பகுதியில் அரிதாகவே இந்த மரங்கள் காணப்படுகின்றன. அரிதான விலைமதிப்புமிக்க தேக்கு, ஈட்டி, கருங்காலி, வேங்கை, செம்மரம், சந்தனமரம் உள்ளிட்ட கன்றுகளை நவப்பட்டி பஞ்., பசுமை குடிலில் உற்பத்தி செய்து, கொளத்தூர் ஒன்றியம் முழுவதும் உள்ள அரசு நிலங்களில் வளர்க்க வட்டார வளர்ச்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


Source : Dinamalar

No comments:

Post a Comment