Thursday, March 3, 2016

காஞ்சரம்பேட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்



அழகர்கோவில்,
காஞ்சரம்பேட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை முல்லைபெரியாறு வைகை பாசன கோட்ட வட்டார தலைவர் தொடங்கி வைத்தார். இதனால் இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொள்முதல் நிலையம்மதுரையை அடுத்த காஞ்சரம்பேட்டையில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் முல்லைபெரியாறு வைகை பாசன கோட்ட காஞ்சரம்பேட்டை வட்டார தலைவர் எம்.பி.ஆர்.மலையாண்டி அசோக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சங்கர்லால், அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சிஇதில் ஏ கிரேடு நெல் சன்ன ரகம் ஊக்கத்தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1520 வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.15.20 என்று கணக்கிடப்படுகிறது. உருட்டு ரகம் ஊக்கத்தொகையுடன் ஒரு குவிண்டால் ரூ.1460க்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் ஒரு கிலோ ரூ.14.60 என்று கணக்கிடப்படுகிறது.
40 கிலோ கொண்ட நெல் மூடைகள் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது. இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் காஞ்சரம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதனால் பெரும் பயன்பாட்டை பெற உள்ளனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment