சிறுவலூரில் பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில் வாரந்தோறும், திங்களன்று தென்னங்கருப்பட்டி, பனங்கருப்பட்டி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில் பனங்கருப்பட்டி, 1,500 கிலோவும், தென்னங்கருப்பட்டி, 500 கிலோவும் வரத்தானது. தென்னங்கருப்பட்டி கிலோ 78 ரூபாய்க்கும், பனங்கருப்பட்டி, 88 ரூபாய்க்கும் விலைபோனது. கடந்த வாரத்தை காட்டிலும், கருப்பட்டி விலை உயர்ந்ததால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
source: Dinamalar
source: Dinamalar
No comments:
Post a Comment