Wednesday, March 23, 2016

சிறுதானியப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி


ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் வட்டாரம் பல்லவ நாயக்கன்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மூலம் சிறுதானியப் பயிர் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் கீழ் பயிற்சிஅளிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர் கு.சுந்தரவடிவேல், விவசாயிகளை வரவேற்று ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கார்த்திகேயன், பயிற்சியின் நோக்கம், விவசாயத் தொழில் நுட்பங்களின் மூலம் விவசாயிகள் அடையும் நன்மைகள், வேளாண்மையில் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து எடுத்துக்கூறினார்.
நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சுப்பையா, விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டம் மற்றும் நாமக்கல் உழவர் பயிற்சி நிலையத்தின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கமளித்தார்.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் ஆர்.தமிழ்செல்வி, தலைமை வகித்தார். வட்டார அட்மா திட்டத் தலைவர் எஸ்.பி.தாமோதரன், அட்மா திட்டத்தின் மூலம் கடந்த மற்றும் வரும் ஆண்டுகளின் திட்ட நோக்கம், செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
வேளாண்மை அலுவலர் கை.வசுமதி, வட்டார வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள் மற்றும் சிறுதானிய விவசாயத்தில் சாகுபடித் தொழில் நுட்பச் செய்திகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
துணை வேளாண்மை அலுவலர் வ.பழனிசாமி, ஆரோக்கியசாமி, கருப்புசாமி, அந்தோணிசாமி, மேகலா ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உயிர் உர விதை நேர்த்தி செயல் விளக்கம், செய்து காண்பித்தனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் பாஸ்கர், கஜேந்திரன், கருப்பண்ணன் ஆகியோர் தங்களது சிறுதானியப் பயிர்களின் விவசாய அனுபவங்களை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மா.ரமேஷ், அட்மா திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

Source : dinamani

No comments:

Post a Comment