தற்போதைய நவரை பருவத்தில் நெற்பயிர், பயறு வகைகளில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகரிக்கும் என்பதால் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ப.முருகவேல் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் 25,500 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர், 11,800 ஹெக்டேர் பரப்பில் பயறு வகைகள் பயிரிடப்பட்டு உள்ளன. தற்போது பச்சைப்பயறு காய் பிடிக்கும் தறுவாயில் உள்ளது.
இதில், பச்சைக்காய் துளைப்பான் தாக்குதல் இருந்தால், அதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு டைகுளோர்வாஸ் 250 மில்லி அல்லது டிரைஅசோபாஸ் 300 மில்லி அளவில் தெளிக்கலாம்.
மேலும் நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு, புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு குளோரோபைரிபாஸ் 500 மில்லி அல்லது டைகுளோர்பாஸ் 250 மில்லி அல்லது கார்டாப் டிரைகுளோரைடு 400 கிராம் இதில் ஏதேனும் ஒன்றினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த தயாமிதாக்சம் 40 கிராம் அல்லது இமிடோகுளோபிரிட் 40 மில்லி அல்லது டிரைஅசோபாஸ் 250 மில்லி இதில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.
Source : Dinamani

No comments:
Post a Comment