Monday, March 28, 2016

கூடுதல் மகசூலுக்கு விதை பரிசோதனை


காஞ்சிபுரம் மாவட்டத்தில், காய், கனி பயிரிடும் விவசாயிகள், அதற்கான விதைகளை பரிசோதனை செய்வது அவசியம்; அதனால், கூடுதல் மகசூல் கிடைக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
விதை பரிசோதனை அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;சித்திரை மாதம், காய், கனி அதிகம் பயிரிடப்படும். தக்காளி, கத்திரி, மிளகாய் விதைகள் என்றால், 10 கிராம் விதையையும், தர்பூசணி, சுரைக்காய், வெண்டை, 100 கிராம் விதையையும் அனுப்பி, பரிசோதனை செய்ய வேண்டும்.பாகற்காய், புடலங்காய் போன்ற விதை, 250 கிராம் கொடுத்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்கான பரிசோதனை கட்டணம், 30 ரூபாயை செலுத்தி, நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பி, விதை பரிசோதனை செய்து, அதிக மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


source : Dinamalar

No comments:

Post a Comment